ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதனை அடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து ஆப்கான் காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காவல் நிலையங்கள் அமைந்துள்ள மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதனை அடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் படையினரும் சரியான பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...