புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு: அமெரிக்கா வரவேற்பு

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 10:43 am


வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவது இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும் திகிலூட்டும் செய்தியாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இரு நாட்டு நல்லுறவுக்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்றும், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றத்தில் இருக்கும் கருத்துகள், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.