/

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அவமானம் 

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நிறத்தின் காரணமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:53 pm

DIN

சிட்னி  ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நிறத்தின் காரணமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகையும், யோகா பயிற்சியாளருமான  ஷில்பா ஷெட்டி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் க்வணடாஸ் விமான நிறுவன ஊழியை ஒருவர் 'செக் இன்' நுழைவாயிலில்    அவரை சோதனை செய்துள்ளார். 

ஷில்பாவின் பை ஒன்று அதிக எடையுள்ளதாகக் கூறி  விமான ஏற அனுமதிக்காமல் ஷில்பாவை அவர் தடுத்துள்ளார். விமானம் புறப்பட குறைந்த அளவே நேரம் இருப்பதாக கூறி, ஷில்பா எடுத்துரைத்த போதும் தொடர்ந்து அவரைத்  தடுத்துள்ளார்.  அத்துடன் ஷில்பாவின் நிறத்தைக் கூறி அவரைத்  தகாத வார்த்தைகளால் பேசியதாக ஷில்பா தெரிவித்துள்ளார்.  இந்த பிரச்னையின் காரணமாக தான் பிடிக்க வேண்டிய மெல்போர் விமானத்தை ஷில்பா தவற விட்டுள்ளார்  

நடந்த சம்பவம் முழுமையையும் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார் 

அத்துடன் குறிப்பிட்ட விமான நிறுவனத்தில் உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இன்னும் வெளிநாடுகளில் தொடர்ந்து இந்தியர்கள் மீது நிறவெறித் தாக்குதல்கள் நடைபெறுவது  வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.