நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமெரிக்க அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது: அதிபர் டிரம்ப் சாடல்

அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாகச் சாடினார். 

News image
Updated On :7 ஏப்ரல் 2019, 2:47 pm

DIN

அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாகச் சாடினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு திட்டம் ஊழல் நிறைந்தது. ஏனென்றால் அவர்கள் எதை தெரிவித்தால் அமெரிக்காவில் மறுவாழ்வு கிடைக்கும் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

அதற்கு காரணம் அமெரிக்க வழக்கறிஞர்கள் தான். அவர்கள்தான் அகதிகளுக்கு எதை வலியுறுத்த வேண்டும் என்று முன்பே தெரிவித்துவிடுவார்கள்.

ஆனால், மறுவாழ்வு திட்டத்தில் குடியேறுபவர்களை பார்த்தால், மல்யுத்த வீரர்களை போன்று இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த கருத்து எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்புச்சுவர் ஏற்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.