மாஸ்கோ: அதிபர் புதினை முதல்முறையாகச் சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புதன் மதியம் ரஷ்யா வந்தடைந்தார்
தனது பிரத்யேக பச்சை நிற ரயில் வண்டியில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகர ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை மதியம் அவர் வந்தடைந்தார். அங்கு அவரை ரஷ்ய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
அங்கிருந்தபடியே ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷ்ய மக்களின் உற்சாகமான வவேற்புடன் நான் இங்கு வந்து சேர்த்துள்ளேன், முன்பே கூறியது போல எனது இந்தப் பயணமானது வெற்றிகரமாகவும் பயனளிக்கும் விதமாகவும் அமையும் என்று கருதுகிறேன்.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் நான் மரியாதைக்குரிய ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் ரஷ்யப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


