கொழும்பு: இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாத்துறை பகுதியில் அதிக அளவில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 353 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 70 பேரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகத்துக்கிடமான 100 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடந்து வருகிறது
அத்துடன் குண்டு வெடிப்புக்கு மறுநாள் திங்களன்று நடைபெற்ற தொடர் சோதனையில் இலங்கை சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
அதன் தொடர்ச்சியாக வியாழனன்று இலங்கையின் நுவரெலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கு கொஞ்சம் முன்னதாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் வியாழனன்று கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாத்துறை பகுதியில் வெள்ளியன்று அதிக அளவில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இவை கைப்பற்ப்பட்டுள்ளான. இதுதொடர்பாக ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மீண்டும் இலங்கையில் நடத்த உள்ள தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஒத்திகை இது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக இலங்கையின் ஜனாதிபதி மாளிகையான அலரி மாளிகைக்கு அருகே இரண்டு தற்கொலை படை வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன.
இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் பதற்றத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

ரயில்வேயில் ஆசிரியர், இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


