பரபரப்பான சாலையில் அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்
அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலையில் அதுவும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலையில் அதுவும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் 7ம் எண் சாலையில், டகோமா அருகே இந்த சம்பவம் ஆகஸ்ட் 1ம் தேதி நடந்திருப்பதாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன.
அந்த விடியோவில் சாலை ஒன்றுக்கு மேலே மிகவும் தாழ்வான உயரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து வருகிறது. அது தனது உயரத்தை மெதுவாகக் குறைத்தபடி பறந்து வந்து, சரியாக சிக்னல் அருகே அதுவும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தோடு வாகனமாக நிறுத்தப்படுகிறது.
உடனடியாக போக்குவரத்துக் காவலர்கள் விரைந்து வந்து விமானத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
எரிவாயு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் விமானத்தின் பைலட்டிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து சாலையில் போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்பட்டு தரையிறங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...