இங்கிலாந்து இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்து இளவரசர் ஃபிலிப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பக்கிங்காம் மாளிகை தெரிவித்துள்ளது.


லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஃபிலிப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பக்கிங்காம் மாளிகை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணியின் சான்டிரிங்காம் எஸ்டேட்டில் இருந்து நோர்ஃபோல்க்கில் உள்ள கிங் எட்வார்ட் 7 மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமையன்று 98 வயதாகும் இளவரசர் ஃபிலிப் அழைத்துச் செல்லப்பட்டதாக மாளிகை வெளியிட்டிருக்கம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஃபிலிப்பின் உடல்நிலையை பரிசோதிக்கவும், சிகிச்சைக்காகவும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் ஆம்புலன்ஸில் எல்லாம் கொண்டு செல்லப்படவில்லை என்றும், இது திட்டமிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிகழ்வாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற லேடி கேப்ரில்லா வின்ட்சோரின் திருமணத்துக்குப் பிறகு அவர் பொதுவெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...