நியூசிலாந்தில் ஞாயிறு அதிகாலை கடுமையான நிலநடுக்கம்
நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் ஞாயிறு அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


க்ரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் ஞாயிறு அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடகிழக்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மில்போர்டு சவுண்ட் பகுதி. இங்கு ஞாயிறு அதிகாலை 3.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
இதனால் ஏற்பட்ட நில அதிர்வுகள் குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் உணரப்பட்டுள்ளது.
ஆல்பின் என்னும் பகுதியினை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசிபிக் தட்டு மற்றும் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு பகுதிகளுக்கு இடையே எல்லையை உருவாக்கும் பகுதியாக ஆல்பைன் உள்ளது. இது நியூசிலாந்திற்கு மிக பெரிய இயற்கை அச்சுறுத்தலில் ஒன்றாக உள்ளது.
இங்கு ரிக்டர் அளவில் 8க்கும் அதிக அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட கூடும் என கடந்த வருடம் ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...