மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அன்புள்ள அமித் ஷா.. தாக்குதலையும் கிரிக்கெட்டையும் ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் அறிவுரை

விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2019, 5:53 am


இஸ்லாமாபாத்: விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடி தாக்குதல் என்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் பேசுகையில், அன்புள்ள அமித் ஷா அவர்களுக்கு, ஆமாம், போட்டியில் உங்கள் அணி வென்றுள்ளது. நன்றாகவே விளையாடினார்கள்.

ஆனால், விமானத் தாக்குதலும், கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை. இவ்விரண்டு விஷயங்களையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது. 

ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், எங்களது நௌஷ்ரா பதில் தாக்கதலில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூருங்கள். ஆச்சரியத்துக்காக காத்திருங்கள் என்று தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.