ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அபூர்வ மூன்று கண் நாகம்: அதிசயத்துப் போன விஞ்ஞானிகள் 

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அபூர்வ மூன்று கண் நாகத்தினால், அந்நாட்டு விஞ்ஞானிகள் அதிசயத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அபூர்வ மூன்று கண் நாகம்: அதிசயத்துப் போன விஞ்ஞானிகள் 

டார்வின்: ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அபூர்வ மூன்று கண் நாகத்தினால், அந்நாட்டு விஞ்ஞானிகள் அதிசயத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ளது டார்வின் நகரம். அங்கிருந்து 40 கிலோமீட்டர் தென் கிழக்கே உள்ளது ஹம்ட்டி டூ பகுதி. இங்கு கடந்த மாதம் நெடுஞசாலை ஒன்றில் இந்த நாகத்தினை ஆஸ்திரேலிய வடக்குப் பிராந்திய பூங்காக்கள் மற்றும் வனஉயிர் சேவைப் பிரிவினர் கண்டறிந்தனர்.

கார்பெட் பைத்தான் எனப்படும் வகையினைச் சார்ந்த இந்த குட்டி நாகத்திற்கு  'மாண்டி பைத்தான்'  எனப் பெயரிடப்பட்டு அந்த சேவை மையத்தினர் பராமரித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில வாரங்களிலேயே அது  மரணமடைந்தது.           

அது குறித்து ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய வனஉயிரியல் விஞ்ஞானிகள் கூறியதாவது:

இந்த நாகமானது ஒரு வினோதமான ஒன்றாகும். அந்த நாகத்தின் தலையில் காணப்படும் மூன்றாவது கண் என்பது  உயிரினங்களில் காணப்படும் இயற்கையான ஜீன் மாறுபாட்டால் உருவானதாகும்.

சுமார் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள இந்த நாகமானது இந்த குறைபாட்டின் காரணமாக உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்தது.

அந்த நாகத்திற்கு இயற்கையாக இரண்டு தலைகளுக்கான அமைப்பு இல்லை. ஒரு மண்டையோட்டு அமைப்பின் உள்ளே கூடுதலாக ஒரு கண் அமைப்பிற்கான இடமும்,.மூன்று செயல்படும் கண்களும் கொண்டு காணப்படுகிறது.

உயிர்களில் இயற்கையாகவே இத்தகைய ஜீன் குறைபாடுகள் காணப்படும். ஆனால் இந்த நாகத்தின் பிரச்னை என்பது கரடுமுரடான மற்றும் நடக்க கூடாத ஒன்றாக அமைந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com