ஹராரே: ஸிம்பாப்வேயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது தோழியை கடித்து இழுத்துச் சென்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டி தோழியைக் காப்பாற்றிய சிறுமியை உலகமே பாராட்டி வருகிறது.
சின்டிரெல்லா கிராமத்தில் 9 வயது சிறுமி லடோயா முவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு முதலை அவளை இழுத்துச் சென்றது. அப்போது அவளுடன் குளித்துக் கொண்டிருந்த ரெபேக்கா என்ற சிறுமி, தனது தோழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த முதலை மீது தாவி அமர்ந்துள்ளார்.
முதலையுடன் சண்டையிட்டு, அதன் கண்களை கைகளால் தோண்டியிருக்கிறார். அது தனது தோழியை பிடித்து வைத்திருப்பதை விடும் வரை அவர் முதலையை தாக்கியுள்ளார். ஒரு வழியாக வலி தாங்க முடியாத முதலை லடோயாவை விட்டுவிட்டு வந்த வழியில் ஓடியது.
தோழியைப் பிடித்தபடி ரபேக்கா கரை வந்து சேர்ந்தார். ரபேக்காவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் லடோயாவுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


