பெரும் விரிகுடா பிராந்தியத்துக்கான வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது சீனா!
இந்த வானொலி ஒலிபரப்பு சேவை, சீன ஊடகக்குழுமத்தின் கீழே இயங்கி வருகிறது.


பெய்ஜிங், சீனா: சீனாவின் குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்கான வானொலி ஒலிபரப்பு சேவை, செப்டம்பர் மாதம் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
ரேடியோ தி கிரேட்டர் பே என்று அழைக்கப்படும் இந்த வானொலி ஒலிபரப்பு சேவை, சீன ஊடகக்குழுமத்தின் கீழே இயங்கி வருகிறது. குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள முதலாவது தேசிய வானொலி நிலையம் இதுவாகும்.

தினமும் 21 மணிநேரம், எஃப்.எம் 101.2 மெகா ஹெட்ஸ் மற்றும் மத்திய அலைவரிசை 1215 கிலோஹர்ட்ஸ் மூலமாக, குவாங்டொங் மாநிலத்தின் 9 நகரங்களுக்கும் ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களுக்கும் இந்த வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர், ஷென் ஹாய்சியுங்துவக்க விழாவில் பேசுகையில், இந்தப் புதிய வானொலி சேவை, சீன பெருநிலப் பகுதிக்கும் ஹாங்காங் மற்றும் மக்கௌ ஆகியவற்றுக்கும் இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.
அதே நாள், இந்த வானொலி நிலையத்தின் புதிய ஊடகமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...