மோடி, டிரம்ப் இணைந்து இந்திய அமெரிக்கர்கள் கூட்டத்தில் பங்கேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது: அமெரிக்க தூதர்

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இணைந்து இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் சந்திப்பில் பங்கேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று தெற்கு மற்றும் மத்திய


பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இணைந்து இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் சந்திப்பில் பங்கேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் அலீஸ் ஜி.வேல்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை மோடி உரையாற்றவுள்ளார். 
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றவுள்ளார். மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் டிம்ப்பும் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.
இது தொடர்பாக அலீஸ் ஜி.வேல்ஸ் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ஹூஸ்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைகிறது. ஏனெனில், இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும், அமெரிக்கவாழ் இந்தியர்களும்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி இந்திய-அமெரிக்க உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க செனட் உறுப்பினர் டெட் குரூஸ் இது தொடர்பாக கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஹூஸ்டன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 
இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர். முக்கியமாக அமெரிக்காவின் பாதுகாப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இந்திய வம்சாவளியினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் அமெரிக்க இந்திய நட்புறவு என்பது உணர்வுபூர்மாக அமைந்துள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com