வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல்

நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டில் இதுவரை வெளிநாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.75 கோடி பேர்.
இதற்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோவில் இருந்து குடியேறியவர்கள் (1.18 கோடி பேர்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சீனர்கள் 1.07 கோடி பேர், ரஷியர்கள் 1.05 கோடி பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சிரியாவிலிருந்து 82 லட்சம் பேர், வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம் பேர்), உக்ரைன் (59 லட்சம் பேர்), பிலிப்பின்ஸ் (54 லட்சம் பேர்), ஆப்கானிஸ்தானிலிருந்து 51 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை 51 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை குறைவாகும். வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில்  குடியேறி வருகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com