சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டம்
மிக அதிக நெருக்கடி நிறைந்த சிறைச்சாலைகளில் கரோனா பரவினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.


டாக்கா: மிக அதிக நெருக்கடி நிறைந்த சிறைச்சாலைகளில் கரோனா பரவினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.
சிறைகளில் நிலவும் சூழ்நிலை குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருக்கும் சிறைத் துறை நிர்வாகம், விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகளின் பட்டியலையும் அனுப்பியுள்ளதாக வங்கதேச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனை வங்கதேச உள்துறை அமைச்சகம் கோரியிருந்த நிலையில், சிறைத் துறை இந்த பரிந்துரையை செய்துள்ளது.
சிறு சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பெயர்களை கணக்கெடுத்து சுமார் 3000 கைதிகள் கொண்ட பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இன்று புதிதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...