/

லட்சத்தை தாண்டியது பிரிட்டனில் பாதிப்பு: 861 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 4:33 pm

DIN

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதில் பிரிட்டனும் அடங்கும். இங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் பலியாகியுள்ளனர்.

இத்துடன் பிரிட்டனில் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 13,729 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,617 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்ந்துள்ளது. 
 

நாடுகள்பாதிப்புபலி
அமெரிக்கா6,52,29233,332
ஸ்பெயின்1,82,816 19,130    
இத்தாலி1,65,15521,645
 
பிரான்ஸ்1,47,86317,167
ஜெர்மனி1,35,6333,856
பிரிட்டன்1,03,09313,729

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.