சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இஸ்ரேலில் 1100 ஆண்டுகள் பழமையான தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரேலிய இளைஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக களிமண் பாத்திரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

News image
1100 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:54 am

DIN

இஸ்ரேலிய இளைஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக களிமண் பானையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேலில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள் அடங்கிய களிமண் பானையை கண்டுபிடித்த உள்ளூர் இளைஞர்கள் அதனை தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.

"நான் தரையில் தோண்டினேன். நான் மண்ணைத் தோண்டியபோது, ​​மிக மெல்லிய இலைகளைப் போல ஏதோ இருப்பதைக் கண்டேன். மீண்டும் பார்த்தபோது இவை தங்க நாணயங்கள் என அறிந்தேன். இது போன்ற ஒரு சிறப்பு வாய்ந்த பழங்கால புதையலைக் கண்டுபிடிப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது." என்று புதையலைக் கண்டுபிடித்த இளைஞர்களில் ஒருவரான ஓஸ் கோஹன் கூறினார்.

ஒன்பதாம் நூற்றாண்டின் அப்பாஸிட் கலிபா காலத்திற்கு முந்தைய 24 காரட் 425 தூய தங்க நாணயங்கள் அந்த நேரத்தில் கணிசமான தொகையாக இருந்திருக்கும் என்று தொல்பொருள் ஆணையத்தின் நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.