மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

1 மீ அளவில் உயர இருக்கும் கடல்நீர்மட்டம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கடந்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் கரியமில வாயுக்களின் உமிழ்வால் 28 லட்சம் கோடி பனிப்பாறைகள் உருகிவிட்டதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
அதிகரிக்கும் பனிப்பாறைகள் இழப்பு
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:05 am

DIN

கடந்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் கரியமில வாயுக்களின் உமிழ்வால் 28 லட்சம் கோடி பனிப்பாறைகள் உருகிவிட்டதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்ற பாதிப்பின் விளைவுகள் குறித்து சமீபத்திய காலத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமான புவியின் மேற்பரப்பில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.

செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புவியின் மேற்பரப்பில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார்.

புவியின் மேற்பரப்பில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது, சூரிய கதிர்வீச்சை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கும் புவியின் திறனை தீவிரமாகக் குறைத்து வருவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும்உருகி வரும் பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள கடல் அல்லது மண் மேலும் அதிகமான வெப்பத்தை உறிஞ்சி, புவியின் வெப்பமயமாதலை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையில் புவியின் வெப்பநிலை 0.2 செல்சியஸ் உயர்ந்து வருகிறது. இது அதிகரித்து வரும் பனிப்பாறைகள் இழப்பால் 0.3 செல்சியஸாக உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட பனி இழப்பின் அளவு, காலநிலை மாற்றம் போன்றவைகளின் கணக்கீடுகள், சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) கோடிட்டுக் காட்டிய மிக மோசமான சூழ்நிலை கணிப்புகளுடன் பொருந்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.