மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 62,076 ஆக உயர்வு

மெக்சிகோவில் கரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 626 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 62,076 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

Mexico's COVID-19 death toll rises to 62,076

Updated On :27 ஆகஸ்ட் 2020, 5:54 am

ANI

மெக்சிகோவில் கரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 626 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 62,076 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் 5,267 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,73,888 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 4,916 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, 650 பேர் உயிரிழந்தனர்.

இன்றுவரை, உலகளவில் 24 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,22,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.