புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கராச்சி: 30 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான கராச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image

கராச்சியில் வெள்ளப்பெருக்கு

Updated On :28 ஆகஸ்ட் 2020, 11:47 am

DIN

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான கராச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருப்பது கராச்சி. பாகிஸ்தானின் முக்கிய வர்த்தகத் தலைநகரமாக அறியப்படும் கராச்சி தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் கராச்சியின் முக்கிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாலிர் மற்றும் கோரங்கி கிராசிங் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை கடற்படை மீட்டது. மேலும் சம்மூ கோத் பகுதியில் சிக்கித் தவித்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கராச்சியில் வியாழக்கிழமை மட்டும் வெறும் 12 மணி நேரத்தில் 223.5 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கராச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 3 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.