நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ரஷியாவில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 569 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :4 டிசம்பர் 2020, 10:58 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 569 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்தும் பலி 500 ஐக் கடந்தும் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 24,02,949 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,868 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 569 பேர் உள்பட மொத்த பலி எண்ணிக்கை 42,176 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 18,88,752 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 472,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.