

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,214 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 587 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 28,214 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,62,668 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,711 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 49,151 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 22,02,540 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,10,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.