6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துருக்கி: தீ விபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலி

துருக்கியி மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

News image
தீவிபத்து நேரிட்ட மருத்துவமனை.
Updated On :20 டிசம்பர் 2020, 1:59 am

DIN

துருக்கியி மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபாஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளதாவது:

காஸியான்டெப் மாகாணத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான சாங்கோ பல்கலைக்கழக மருத்துவனையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளிகள் அந்த விபத்தில் உயிரிழந்தனா் என்று தனது சுட்டுரைப் பதிவில் ஃபாஹ்ரெடின் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, காஸியான்டெப் மாகாண ஆளுநா் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவமனை தீவிபத்தில் 8 போ் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் அந்த எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறிய மருத்துவமனை நிா்வாகம், உயிரிழந்த அனைவரும் அந்தப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிவித்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.