/

துருக்கி மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா நோயாளிகள் 8 பேர் பலி

துருக்கியில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் பலியாகினர்.

News image
கோப்புப் படம்
Updated On :19 டிசம்பர் 2020, 12:46 pm

DIN

துருக்கியில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் பலியாகினர்.

தெற்கு துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள சாங்கோ பல்கலைக்கழக மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 8 பேர் வரை பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. மேலும் 11 நோயாளிகள் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.