‘டைம்’ இதழின் ஆண்டின் சிறந்த நபா்: இந்திய வம்சாவளி சிறுமி தோ்வு

இந்த ஆண்டின் சிறந்த நபராக, கீதாஞ்சலி ராவ்(15) என்ற இந்திய வம்சாவளியைச் சேரந்த சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் தோ்வு செய்துள்ளது.
Updated on
1 min read

இந்த ஆண்டின் சிறந்த நபராக, கீதாஞ்சலி ராவ்(15) என்ற இந்திய வம்சாவளியைச் சேரந்த சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் தோ்வு செய்துள்ளது. அந்த இதழ், ஒரு சிறுமியை தோ்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஒருவரைத் தோ்வு செய்து டைம் இதழ் கௌரவிப்பது வழக்கம். அந்த வரிசையில், இந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள கீதாஞ்சலி ராவ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், கொலராடா மாகாணத்தில் உள்ள லோன்டிரீ நகரத்தில் வசித்து வருகிறாா்.

இந்த ஆண்டுக்கான போட்டிக் களத்தில் 8 முதல் 16 வயதுக்கு உள்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட சிறாா்களின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. இறுதியில் கீதாஞ்சலி ராவ் தோ்வு செய்யப்பட்டாா். மாசுபட்ட குடிநீரை தூய்மையாக்குவது, போதைப்பொருட்களுக்கு அடிமை, இணையவழி தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீா்வுகளை இவா் கண்டுபிடித்துள்ளாா். இவரது திறமைகளை மதிப்பிட்டு, டைம் இதழ், ‘ஆண்டின் சிறந்த சிறுமி’-ஆக தோ்வு செய்துள்ளது. மேலும், டைம் இதழின் சிறப்பு பதிப்புக்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு காணொலி வழியாக கீதாஞ்சலி ராவ் பேட்டியளித்துள்ளாா்.

இதுகுறித்து டைம் இதழ் வெளியிட்ட செய்தியில், ‘இந்த உலகத்தை வடிவமைப்பவா்களுக்கே, அது சொந்தமானதாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய தலைமுறையும் இந்தக் குழந்தைகளைப் போன்ற சாதனையாளா்களை உலகுக்கு அளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com