இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிரேசிலில் கரோனா பலி 1.86 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.86 லட்சத்தைக் கடந்துள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2020, 6:51 am

DIN

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.86 லட்சத்தைக் கடந்துள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,177 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 72 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 72,13,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 186,356 ஆக உள்ளது. அதேநேரத்தில் 62,22,764 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 804,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.