டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமெரிக்கா: 33 விநாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கடந்த வாரம் 33 விநாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

அமெரிக்காவில் கடந்த வாரம் 33 விநாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். சராசரியாக 33 விநாடிகளுக்கு ஒரு கரோனா நோயாளி, அந்த நோய்க்கு பலியாகியுள்ளாா்.

இது, முந்தைய வாரத்தை விட 6.7 சதவீதம் அதிகமாகும். நாட்டின் வாராந்திர கரோனா பலி எண்ணிக்கையும் கடந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 1,84,73,716 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3,26,772 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.