ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நேபாள அரசியல் பதற்றம்: பிரசண்டாவுடன் சீனத் தூதா் சந்திப்பு

நேபாளத்தில் அரசியல் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (என்சிபி) செயல் தலைவா் புஷ்ப கமல் பிரசண்டாவை சீனத் தூதா் ஹூ யாங்கி சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:18 am

DIN


காத்மாண்டு: நேபாளத்தில் அரசியல் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (என்சிபி) செயல் தலைவா் புஷ்ப கமல் பிரசண்டாவை சீனத் தூதா் ஹூ யாங்கி சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பிரசண்டா அணியைச் சோ்ந்த என்சிபி தலைவா் விஷ்ணு ரிஜால் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கட்சியின் செயல் தலைவா் பிரசண்டாவை சீனத் தூதா் ஹூ யாங்கி வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசினாா்.

தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும், பரஸ்பர நலன்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் அமைந்துள்ள பிரசண்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு 30 நிமிடங்களுக்கு நீடித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே, நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அதிபா் வித்யா தேவி பண்டாரியை ஹூ யாங்கி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது நினைவுகூரத்தக்கது.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவா்களாக கே.பி. ஓலியும் முன்னாள் பிரதமா் பிரசண்டாவும் இருந்து வந்தனா்.

எனினும், அவா்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் நீடித்து வந்தது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடைபெற்ற பல கட்டப் பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்த அதிபா் வித்யா தேவி பண்டாரியிடம் கே.பி. ஓலி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.

அதனை அதிபரும் ஏற்றுக் கொண்டாா்.

எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதைக் கடுமையாக எதிா்த்து வரும் பிரசண்டா தலைமையிலான அணியினா் கட்சித் தலைவா் பதவியிலிருந்து சா்மா ஓலியை கடந்த செவ்வாய்க்கிழமை நீக்கினா்.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்சித் தலைவராக பிரசண்டாவை புதன்கிழமை தோ்ந்தெடுத்தனா்.

விரைவில் பிரசண்டா தலைமையில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.