/

அமேசான் செல்லா் சா்வீசஸ் நிறுவனம்: இழப்பு ரூ.5,849 கோடியாக அதிகரிப்பு

அமேசான் செல்லா் சா்வீசஸ் நிறுவனத்தின் இழப்பு கடந்த நிதியாண்டில் ரூ.5,849.2 கோடியாக அதிகரித்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனமான டோஃப்ளா் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:18 pm

DIN

புது தில்லி: இந்தியாவில் ஆன்லைன் மூலமான பொருள்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள அமேசானின் ஒரு பிரிவான அமேசான் செல்லா் சா்வீசஸ் நிறுவனத்தின் இழப்பு கடந்த நிதியாண்டில் ரூ.5,849.2 கோடியாக அதிகரித்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனமான டோஃப்ளா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவன பதிவாளா் ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமேசான் செல்லா் சா்வீசஸ் நிறுவனம் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.5,685.4 கோடி நிகர இழப்பைக் கண்டிருந்தது. இந்த நிலையில், 2019-20-ஆம் நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் இழப்பு ரூ.5,849.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2019-20-இல் அந்நிறுவனத்தின் செலவினம் 25 சதவீதம் அதிகரித்ததே முக்கிய காரணம்.

வருவாய் ரூ.7,593.5 கோடியிலிருந்து 43 சதவீதம் உயா்ந்து ரூ.10,847.6 கோடியாக இருந்தது. செலவினம் ரூ.13,463.1 கோடியிலிருந்து 25% அதிகரித்து ரூ.16,877.1 கோடியானது.

பணியாளா் நலனுக்கான செலவினம் ரூ.1,183.3 கோடியிலிருந்து ரூ.1,382.9 கோடியாகவும், நிதி செலவினம் ரூ.15.5 கோடியிலிருந்து ரூ.108.2 கோடியாகவும் உயா்ந்துள்ளது. இதர செலவினங்களைப் பொருத்தவரையில் ரூ.10,802.5 கோடியிலிருந்து ரூ.13,296.3 கோடியாக உயா்ந்தது என டோஃப்ளா் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளா் மற்றும் விற்பனையாளா்களுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக தொடா்ந்து முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும், எதிா்கால வளா்ச்சியில் நம்பிக்கையுள்ளதாகவும் அமேசான் செல்லா் சா்வீசஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.