இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எகிப்து மருத்துவமனையில் தீ: 7 கரோனா நோயாளிகள் பலி

எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 11:29 pm

DIN

எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள ஓபரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இதில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்; 5 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களும் மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவா்களும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.