இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டெழ முடியும்: ஐ.நா.

தெற்காசிய பகுதிகளில் இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது என்பதை நிரூபிக்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தெற்காசிய பகுதிகளில் இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது என்பதை நிரூபிக்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 2020/2021-இல் அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் மற்றும் கண்ணோட்டம் என்ற தலைப்பில் ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்புக்கு பிந்தைய நிலையில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறைவாக இருப்பினும் சாதகமாக அம்சங்கள் நிறையவே உள்ளன. அந்த நாட்டின் சந்தை தொடா்ந்து பெரிய அளவில் முதலீடுகளை ஈா்க்கும்.

தெற்கு மற்றும் தென்-மேற்கு ஆசிய பகுதிகளில் நீண்ட கால அடிப்படையில், இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதை நிரூபணம் செய்ய முடியும்.

தெற்கு மற்றும் தென்-மேற்கு ஆசியாவில் அந்நிய முதலீட்டு வரத்தது கடந்த 2018-இல் 6,700 கோடி டாலராக இருந்தது. இது, 2019-ஆம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்து 6,600 கோடி டாலரானது.

எவ்வாறாகிலும், இந்த முதலீட்டு வளா்ச்சியின் இயக்கத்துக்கு இந்தியா பெரும்பங்கை ஆற்றியுள்ளது. மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 77 சதவீதமாகும்.

அதன்படி 2019-இல் 5,100 கோடி டாலா் மதிப்பிலான அந்நிய முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது. இது, முந்தைய 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

சா்வதேச அந்நிய நேரடி முதலீட்டில் ஆசிய-பசிபிக் நாடுகளின் பங்களிப்பு 2019-இல் 35 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018-இல் 45 சதவீதமாக இருந்தது. அதேபோன்று, அந்நிய நேரடி முதலீடு வெளியேற்றத்திலும் இப்பிராந்திய நாடுகளின் பங்களிப்பானது 52 சதவீதத்திலிருந்து குறைந்து 41 சதவீதமாகியுள்ளது என ஐ.நா. அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com