கரோனா தடுப்பூசி கொள்முதல்:இந்திய அரசின் உதவியை நாடியது நேபாளம்
கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசின் உதவியை நேபாளம் நாடியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
காத்மாண்டு: கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசின் உதவியை நேபாளம் நாடியுள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டில் வெளியாகும் காத்மாண்டு போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தியில், ‘நேபாள மக்கள்தொகையில் 20% பேருக்கு செலுத்த தேவைப்படும் கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு உதவிபுரியுமாறு இந்திய அரசுக்கு நேபாளம் கடிதம் எழுதியுள்ளது. அதற்கான கட்டணத்தை செலுத்திவிடுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆகியவை மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. இந்தப் பரிசோதனைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...