பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாகிஸ்தானில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image

Pakistan's Covid-19 fatalities cross 10,000 mark

Updated On :30 டிசம்பர் 2020, 10:03 am

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,047 ஆக உயர்ந்துள்ளது. 

பெரும்பாலான இறப்புகள் பஞ்சாப் மாகாணத்திலும், அதற்கு அடுத்ததாக சிந்து மாகாணத்திலும் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நிகழ்ந்துள்ளன. நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 

மேலும், ஒரேநாளில் 2,155 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,77,240 ஆக உள்ளது. தொற்று விகிதம் 5.82 சதவீதமாக உள்ளது. இதில், 4,30,113 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய்த் தொற்று பாதித்த 2,219 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் என்.சி.ஓ.சி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய இரண்டு பேர் உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிந்து மாகாணம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், புதியவகை கரோனா வைரஸ் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக என்.சி.ஓ.சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.