

பிரபல ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோன்டா லாஸ் ஏஞ்சலஸில் அண்மையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்தார். அப்போது அவர் அடுத்த பத்து ஆண்டுகளில் கார்பன் உமிழ்வைக் குறைக்கக் கோரி, அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
ஹாலிவுட் தொலைக்காட்ச்சித் தயாரிப்பாளர் நார்மன் லியர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிட்டி ஹாலில் தொடங்கி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஹாக்கின் பீனிக்ஸ் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். இவர் 'ஜோக்கர்' படம் மூலம் உலகப் புகழ்ப் பெற்ற நடிகர் ஆவார். பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஹாக்கிங் பீனிக்ஸ்.
வாஷிங்டனில் இதுவரை 14 முறை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்த ஜேன் ஃபோன்டா, தற்போது லாஸ் ஏஞ்சலஸில் இதனை தொடங்கினார். அக்கூட்டத்தின் கூட்டத்தினரிடையே பேசிய ஃபோன்டா, நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்து, கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒன்றாகவே கைது செய்யப்பட்டோம். இந்த பரப்புரையின் காரணம் பருவநிலை நெருக்கடியின் அவசரம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தத்தான்’ என்றார்
கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதை பரப்புரை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. சமீப காலமாக காட்டுத் தீ, வறட்சி போன்ற பேரிடர்கள் இங்கு நடந்துள்ளன என்றார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் பருவ நிலை மாற்றம் குறித்த விழப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்றிருக்கும் ஜேன் ஃபோன்டா, ஃபையர் ட்ரில் ஃப்ரைடே என்ற பெயரில் வெள்ளிக்கிழமைதோறும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான விழப்புணர்வு பேரணி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி பரப்புரைகள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதற்காக ஜேன் ஃபோன்டாவை ஐந்து முறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.