பிப். 24, 25 - இந்தியா வருகிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளதை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 
பிப். 24, 25 - இந்தியா வருகிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளதை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்கள் துறைசார் அமெரிக்க அமைச்சர்களான மார்க் எஸ்பர் மற்றும் மைக் பாப்மே ஆகியோரைச் சந்தித்து அதிபர் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com