மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம்

சீனாவில் அதிகம் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2020, 6:41 am

DIN

சீனாவில் அதிகம் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக புதன்கிழமை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 440 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை ஆணைய துணைத் தலைவர் லீ பின் தெரிவித்தார்.

மேலும் இந்த வைரஸ் கிருமி பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய் தொற்று அபாயம் கொண்டது என்று சீன சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவர்களில் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 282 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 278 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இதன் பாதிப்பு காரணமாக 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கான மருத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.