கரோனா வைரஸ்: சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 15-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 571 ஆக உயா்ந்துள்ளது.
இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘‘புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது’’
இதையடுத்து, சீனாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக ஹுபெய் மாகாணம், வூஹான் நகரிலுள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் இந்தியத் தூதரகம் விவரங்களைப் பெற்று வருகிறது. பெய்ஜிங் மற்றும் வூஹானில் உள்ள சீன அதிகாரிகளுடனும், ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களுடனும் தூதரகம் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வழங்கிய ஆலோசனைகள் உட்பட சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகள் வூஹானில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கல் உட்பட அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கு +8618612083629 மற்றும் +8618612083617 ஆகிய இரண்டு உதவி எண்களை சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...