பெற்றோரைத் துப்பாக்கியில் சுட்ட 26 வயது மகன் போலீஸில் சரண்

தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீவில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

26 வயதான கொலையாளி உள்ளூர் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் தானாகவே முன்வந்து போலீஸில் சரணடைந்ததாகவும் உள்ளூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பலியானவர்கள் கொலையாளியின் உறவைனர்கள்தான், 65 வயது தந்தை, 56 வயது தாய், 36 மற்றும் 69 வயதுடைய இரண்டு ஆண்கள், 36 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக, உறவினரல்லாத ஒரு ஆணும் பெண்ணும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பெரும் காயமடைந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் காவல்துறைத் தலைவர் ரெய்னர் மோல்லர், இது ஒரு குடும்பப் பிரச்னையாக இருக்கலாம்.  வேறு யாரும் இந்தக் குற்றத்தில் கொலையாளியுடன் கூட்டாக ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கொலையாளியின் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை.

கொலையாளி இதற்கு முன்னர் எந்தவொரு கிரிமினல் குற்றமும் செய்யவில்லை என்று மோல்லர் கூறினார்.

100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்திற்கு நிறுத்தப்பட்டனர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக சுற்றி வளைக்கப்பட்டன.

ரோட் ஆம் சீ என்பது ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வூர்ட்டெம்பர்க்கில் 5,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com