பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியை பிரான்ஸ் உறுதிப்படுத்தியது

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியை பிரான்ஸ் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2020, 12:33 pm

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியை பிரான்ஸ் பதிவு செய்துள்ளது. பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் கூறியதை ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று ஆபத்தான நிலையில், 80 வயதான சீன மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஒளிபரப்பாளரான பி.எஃப்.எம்.டி.வி தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, உலகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 132 ஆக உள்ளது.

சீனா மற்றும் பிரான்ஸ் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, வியட்நாம், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, பின்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள ஒரு டஜன் நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.