சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புத்துயிருடன் இருப்பதன் இரகசியம் என்ன?
2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99ஆவது பிறந்த நாளாகும்.


2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99ஆவது பிறந்த நாளாகும். 71 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக செயல்பட்டு, 9.1 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது, உலகளவில் மிகப் பெரிய அரசியல் கட்சியின் அசாதாரன வளர்ச்சிப் போக்கையும் பசுமை மாறாத வசீகரத்தையும் வெளிக்காட்டுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றியின் இரகசியம் என்ன என்பதை முழு உலகமும் ஆராய்ந்து வருகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது முதல், சுயநலன் பாராமல், பொது மக்களுக்கு முழுமூச்சுடன் நன்மை புரிவதையே அடிப்படை கோட்பாடாகக் கொண்டுள்ளது.
கொவைட்-19 நோய்த் தடுப்புப் போராட்டத்தில், மக்களே முதன்மை என்ற கருத்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரைக் காப்பாற்றும் வகையில் சீனா பதில் விலையைப் பொருப்படுத்தாமல் இயன்ற அளவில் முயற்சி செய்து வருகிறது.
சுமார் நூறு ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து சென்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு உள்ள மற்றொரு காரணம், தற்சார்பாக தனது நிலைமைக்குப் பொருந்திய சீரான வளர்ச்சிப் பாதையைக் கண்டறிந்ததே ஆகும். நடைமுறையிலிருந்து தொடங்கி பொது மக்களின் நலன்களை முதலிடத்தில் வைத்து, சீர்திருத்தம், புத்தாக்கம் மற்றும் திறப்பு முறையில் கூட்டு வளர்ச்சியைத் தேடும் பாதை இதுவாகும்.
.jpg)
புதிய யுகத்தை வரவேற்ற பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்பில்லாத பெரும் துணிச்சலுடன் கண்டிப்பான முறையில் கட்சியை ஒழுங்குபடுத்தும் பணியை முன்னேற்றி வருவதன் மூலம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கத்துக்கு உறுதியான ஆதாரத்தை வழங்கியுள்ளது.
சீன மக்களின் நலன் மட்டுமல்லாது, மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சியையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தில் கொண்டு செயல்படுகிறது. சொந்தப் பணிகளை செவ்வனே செய்வதோடு, தனது வளர்ச்சியின் மூலம் உலகிற்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனா பற்றி அறிந்து கொள்ளும் முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிராற்றல் மற்றும் திறமைமிக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பொது மக்களை மையமாகக் கொண்டு, சீனாவை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, உலகின் செழுமை மற்றும் அமைதிக்கு ஆற்றலை அதிகரிக்கும்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...