/

காற்று மூலமாகவே கரோனா எளிதில் பரவும்: 200 விஞ்ஞானிகள் தகவல்

முப்பத்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியிருக்கும் ஆய்வறிக்கையில், கரோன தொற்று காற்று மூலமாகவே பரவிவிடும் என்றும், ஒரு சிறு துகள் கூட கரோனா பரவக் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

News image

காற்று மூலமாகவே கரோனா எளிதில் பரவும்: 200 விஞ்ஞானிகள் தகவல்

Updated On :6 ஜூலை 2020, 11:14 am

PTI


நியூ யார்க்: முப்பத்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியிருக்கும் ஆய்வறிக்கையில், கரோன தொற்று காற்று மூலமாகவே பரவிவிடும் என்றும், ஒரு சிறு துகள் கூட கரோனா பரவக் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஐ.நா. சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா தொற்று பாதித்தவரின் இருமல் மற்றும் தும்மல் மூலமாகவோ கரோனா தொற்று பரவும் என்பது.

தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெளியிடங்களுக்குச் செல்லாமல் பொது மக்கள் தங்களைத் தாங்களே பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா தொற்றானது அருகில் வாழும் கரோனா தொற்றாளடரிம் இருந்து, காற்று மூலமாகவே வீடுகளுக்குள்ளும் பரவும் என்கிறது.

32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் திறந்த கடிதத்தில், மிகச் சிறு துளி மூலம் கூட கரோனா பரவும். எனவே, சில பரிந்துரைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா தொற்றாளர் இருமல் அல்லது மும்மும் போது நீர்திவளைகள் பட்டால்தான் கரோனா பரவும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது. இதை அடிப்படையாக வைத்தே முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அடிக்கடி கையை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், 5 மைக்ரான்களுக்கும் குறைவான ஒரு சிறு திவளை மூலமாகவும் கரோனா பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மூடப்பட்ட கதவுகளுக்குள் இருப்போரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும், மருத்துவப் பணியாளர்களுக்கு மிகச் சிறு திவளையையும் வடிகட்டும் வகையிலான என்95 முகக்கவசங்கள் வழங்கப்பட வண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.