பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விலைமிக்க விவாகரத்து: ரூ. 24 ஆயிரம் கோடி பெற்றுப் பணக்காரரான  சீனப் பெண்மணி!

ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி.

News image
Updated On :2 ஜூன் 2020, 10:12 am

DIN


ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி.

சீனாவில் உள்ள ஷென்ஸென் காங்டாய் பயாலஜிகல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி டியு வெய்மின். நோய்தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியான இவர், தனது மனைவிக்கு விவகாரத்து வழங்கி, அதற்கான இழப்பீடாக நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை பிரித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் டியு வெய்மின் முன்னாள் மனைவி யுவான் லிபிங் உலகின் மிகப் பணக்கார பெண்மணியாக மாறியுள்ளார். 

விவாகரத்துக்கு இழப்பீடாக டியு வெய்மின் பிரித்துக் கொடுத்த பங்குகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3.2 பில்லியன் டாலர். அதாவது திங்கள்கிழமை நிலவரப்படி இந்திய மதிப்பில் 24,179 கோடியாகும். (2,41,79,36,00,000)

உலகின் மிக விலை உயர்ந்த விவாகரத்தாக டியு வெய்மின் - யுவான் லிபிங் விவகாரத்து இடம்பெற்றுவிட்டது.  இதன் மூலம் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணியாகவும் யுவான் உருவாகியுள்ளார்.

அந்த பங்குகளின் வாக்களிக்கும் உரிமையை வெய்மினே வைத்திருந்தாலும், பங்குகளின் நேரடி உரிமையாளராக யுவான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகின் பணக்காரப் பெண்மணியாகியிருக்கும் யுவான் லிபிங், பெய்ஜிங்-கில் உள்ள சர்வதேச வணிகம் மற்றும் பொருளாதாரவியல் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

ஏற்கனவே அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது மனைவியை விவாகரத்து செய்த போது, அமேசான் நிறுவனப் பங்கில், 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பிரித்துக் கொடுத்தது நினைவிருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.