ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றிய கேரி லாம் கருத்துக்கள்

ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியில் நிறைவேற்றப்பட்டது, நியாயமான சட்ட முறைமையானது.
ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றிய கேரி லாம் கருத்துக்கள்

ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியில் நிறைவேற்றப்பட்டது, நியாயமான சட்ட முறைமையானது.

ஆனால், இச்சட்டம், சுதந்திரத்தைப் பறிக்கும் என்று சிலர் தெரிவித்தனர். இக்கருத்துக்கு “ஆதாரம் இல்லை” என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தலைமை அதிகாரி கேரி லாம் அம்மையார் ஹாங்காங்கில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அடிப்படை சட்டத்தால் வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் ஹாங்காங் மக்கள் இன்னும் அனுபவிக்கின்றனர். ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் உயர் தன்னாட்சி உரிமை மாறாது. மேலும், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையில் சீனா ஊன்றி நின்று வருகின்றது.

சீனத் தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்க வேண்டும். மேற்கூறிய கோட்பாடுகளைக் கொண்டு சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது என்று சுட்டிக்காட்டத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com