வலுவான பொது சுகாதார முறைமை வேண்டும்: ஷி ஜின்பிங்

வலுவான பொது சுகாதார முறைமையைக் கட்டியமைக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.
வலுவான பொது சுகாதார முறைமை வேண்டும்: ஷி ஜின்பிங்

வலுவான பொது சுகாதார முறைமையைக் கட்டியமைக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஜுன் 2ஆம் நாள் பிற்பகல் தலைமை தாங்கி போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மக்களின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்புக்கான அடிப்படையாகும். சுகாதாரத் துறையில் முன்னெச்சரிக்கை அமைப்புமுறையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், நோய் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மீட்புதவித் திறனைப் பன்முகங்களிலும் உயர்த்தி, மக்களின் உடல் நலத்தைப் பேணிக்காப்பதற்கு வலுவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேசக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றி, உலகளவில் நோய் தடுப்பு பொருட்களின் விநியோகத்தில் பங்கெடுத்து, சுகாதாரப் பொது சமூகத்தை சீனா உருவாக்கும் எனவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com