மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் கோபுரம் வருகிற ஜூன் 25 அன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டங்களுள் ஒன்றான ஈபிள் கோபுரம், கரோனா அச்சுறுத்தலினால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 13 அன்று மூடப்பட்டது.
தற்போது பிரான்சில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் பல திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஜூன் 25 அன்று மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
11 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கோபுரத்தின் முதல் தளம் வரை மட்டுமே செல்ல முடியும். அதுவும் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். மேலே ஏறும் பார்வையாளர்கள் மற்றும் கீழிறங்கும் பார்வையாளர்கள் தொடர்புகொள்ளாத அளவுக்கு, கிழக்கு தூணிலிருந்து ஏறவும், மேற்குத் தூண் வழியாக பார்வையாளர்கள் இறங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோரக் கடைகளை முறைப்படுத்துவதில் சிக்கல்! விற்பனைக் குழு - கவுன்சிலர்கள் அதிகார மோதல்

மந்தகதியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்!
பிரதமரின் போதைப் பொருளில்லா இளைய தலைமுறை பிரசாரம்! அமிர்த வித்யாலயம் பங்கேற்பு!

பழுதடைந்த எடையாா்பாக்கம் ஏரியின் மதகு: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



