சீன - ரஷிய இந்திய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 23ஆம் நாள், காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீன - ரஷிய இந்திய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
Published on
Updated on
1 min read

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 23ஆம் நாள், காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மூன்று நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு குறித்து வாங் யீ 3 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஒன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்தி, பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் பேணிக்காக்க வேண்டும். 

இரண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, தொடர்புடைய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். 

மூன்று, பொருளாதார மற்றும் வர்த்தகம், எரியாற்றல், போக்குவரத்து, கல்வி, பண்பாடு, சுகாதாரம் முதலிய துறைகளில் முத்தரப்பு அமைச்சர்களின் உரையாடல் அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும், மூன்று நாடுகளுக்கிடையிலான பரஸ்பரக் கூட்டாளி மற்றும் வாய்ப்புத் தன்மை வாய்ந்த உறவை சீனா, ரஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சரியாகக் கையாள வேண்டும் என்றும் வாங் யீ தெரிவித்தார். 

அதனையடுத்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் மூன்று நாடுகளும் பலதரப்புவாதத்தையும் உலகின் பலதுருவமயமாக்கத்தையும் உறுதியாக ஆதரிக்க வேண்டும் என்றும், சர்வதேச உறவு என்பது சர்வதேசச் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்தனர். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com