விண்வெளிக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர் ஒருவர் அங்கு தனது கண்ணாடியை தவற விட்டுள்ளார். இருப்பினும் இதனால் விண்வெளி மையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா கூறியுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரிகளை மாற்றுவதற்காக அமெரிக்காவின் விண்வெளி கமாண்டர் கிறிஸ் கேசிடி மற்றும் பாப் பென்கென் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர்.
விண்வெளி மையத்தில் இருந்து வெளியே செல்லும்போது, தங்களது விண்வெளி உடையுடன் இணைக்கப்பட்ட நிலையில் மணிக்கட்டு பகுதியில் ஒரு கண்ணாடியை வைத்திருப்பர். பேட்டரி மாற்றும் பணியில் ஈடுபட்டபோது, கமாண்டர் கிறிஸ் கேசிடி தனது கண்ணாடியை தவறவிட்டுள்ளார். அது விண்வெளியில் மிதந்து சென்றது. பூமியைச் சுற்றி வரும் மில்லியன் கணக்கான குப்பைகளுடன் அது சேர்ந்ததாக நாசா கூறுகிறது.
கண்ணாடியை தவறவிட்ட நிலையிலும், 6 மணி நேரம் பணியை முடித்துவிட்டு வீரர்கள் திரும்பியுள்ளனர். மேலும், இதனால் விண்வெளி மையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி மையத்தில் காலாவதியான நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிநவீன மூன்று புதிய லித்தியம்- அயன் பேட்டரிகளை வீரர்கள் பொறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லக்னோவில் ஷிகர் தவான் - புகைப்படங்கள்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீட்டுத் தேதி!

ஸ்ரீலீலா ஸ்டில்ஸ்!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டார்! - உறுதி செய்தார் அதிபர் பெஷேஷ்கியன்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

