சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சீனாவைத் தவிர்த்து உலக அளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஆனது: உலக சுகாதார அமைப்பு

சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10000-ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:04 pm

DIN

சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10000-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. மனிதர்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சேர்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை பலி கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். 

அந்த வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது. கரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10000-ஆகவும் பலியானோரின் எண்ணிக்கை 166ஆகவும் உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

அதேசமயம், சீனாவில், அந்த வைரஸால் 80,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,946 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 72 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 10,556 பேரையும் சேர்த்து, சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90,870-ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.