டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீனாவைத் தவிர்த்து உலக அளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12600ஆக உயர்வு: உலக சுகாதார அமைப்பு 

சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12600ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 மார்ச் 2020, 3:13 am

DIN

சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12600ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. மனிதர்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சேர்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை பலி கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

அந்த வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது. சீனாவின் வூஹான் நகரில் தீவிரமாகப் பரவி வந்த கரோனா வைரஸின் தாக்கம், சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. 

இந்நிலையில் சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12668 ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொவைட்-19’ வைரஸுக்கு உலகளவில் சுமார் 76 நாடுகளில் 214 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.